இந்திய இராணுவ வேலையை வேண்டாம் என மறுத்த நடிகர் நம்பியார்.. காரணம் என்ன தெரியுமா
எம்.என். நம்பியார்
தமிழ் சினிமாவின் வில்லாதி வில்லன் நடிகர் எம்.என். நம்பியார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இணையாகத் திரைப்படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்தவர் நம்பியார்.
நாடகக் குழுவில் பயணித்து பின் பக்த ராமதாஸ் எனும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தனது ஆரம்பகால கட்டத்தில் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடித்து வந்த இவருக்கு, கஞ்சன் எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்த நம்பியார், ஒரு கட்டத்தில் வில்லனாக நடிக்க துவங்கினார். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாகத் தொடர்ந்து நடித்து வந்தார். வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.
இராணுவ வேலையை மறுத்த நம்பியார்
சினிமாவில் பல சாதனைகளைப் படைத்த நம்பியார் அவர்கள், முதலில் இராணுவ வேலையில்தான் சேர்ந்துள்ளார். ஆனால், ஒரே நாளில் அந்த வேலையை விட்டுவிட்டுத் திரும்ப வந்துள்ளார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதில், "எனக்கு 19 வயதிலேயே இந்திய இராணுவத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அங்கு போனால் அசைவம் சாப்பிட வேண்டுமென்ற ஒரே காரணத்தினால் போன ஒரே நாளில் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்" என கூறியுள்ளார்.