மாமனிதன் திரைப்படத்தின் முலம் லாபம் பார்த்தாரா யுவன் ஷங்கர் ராஜா ! முழு விவரம் இதோ..
மாமனிதன் படத்தின் வசூல்
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாமனிதன். இவர்கள் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
மாமனிதன் திரைப்படத்தை இசையமைபாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இருந்தார், மேலும் இப்படத்திற்காக அவர் தனது தந்தை இளையராஜாவுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
பல சிக்கில்களை சந்தித்து சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் தற்போது இப்படத்தின் வியாபர நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த மாமனிதன் திரைப்படம் ரூ 8 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேலும் அப்படம் தமிழகத்தில் மொத்தமாக ரூ. 3.50 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் இப்படம் அஹா தமிழ் OTT தளத்திற்கு ரூ. 6 கோடிக்கும், ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமத்திற்கு ரூ. 3.50 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ரைட்ஸ் ரூ. 2 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
இதன்முலம் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு மாமனிதன் திரைப்படம் ரூ. 7 கோடி அளவில் லாபம் கிடைத்துள்ளதாக விவரம் வெளியாகியுள்ளது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
