மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் இது தானா ! இணையத்தில் கசிந்த புகைப்படம்..
பிஸியான வடிவேலு
வைகைப்புயல் வடிவேலு பல வருடங்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.
அதன்படி அவர் தற்போது நடித்து வரும் முக்கிய திரைப்படங்களில் ஒன்று மாமன்னன், இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அப்படத்தில் நட்சத்திர பாட்டாளமே நடித்து வருகின்றனர்.
வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் என முக்கிய நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அப்படத்தில் நடித்து வருகின்றனர்.

கசிந்த புகைப்படம்
பெரிதும் எதிர்பார்ப்படும் அப்படத்தில் இருந்து வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், இப்படத்தில் வடிவேலுவின் பெயரே மாமன்னன் தான்.
அரசியல் திரைப்படமான இதில் வடிவேலு அரசியல்வாதியாக நடித்துள்ளார். இது குறித்த அப்படத்தின் போஸ்டர் தான் இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த கதை இது தானா ! இணையத்தில் வைரலான புகைப்படம்...