அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மாமன்னன் படத்தின் கதை இதுதானா.. இதோ பாருங்க
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வருகிற 29ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கதை இதுதானா
அதன்படி, அடிமுறை கலையை கற்று தரும் உதயநிதி ஸ்டாலின் தனது சிறு வயதில் ஏற்பட்ட சம்பவத்தினால் தனது தந்தை வடிவேலுவுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறார்.
ஊருக்குள் மக்களை கொடுமைப்படுத்தி வரும் நபருக்கு எதிரான விஷயங்களை வடிவேலு திரட்டி வருகிறார்.
இந்த சமயத்தில் தனது தந்தையின் நிலைமையை புரிந்துகொண்டு அவருடன் இணைகிறார் உதயநிதி. இவர்கள் இருவரும் இணைந்து கடினமான நிலைமையை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே படத்தின் மீதி கதை என தகவல் வெளியாகியுள்ளது.
ரூ. 150 கோடி சம்பளம்.. ரூ. 600 கோடி பட்ஜெட் படத்தில் வில்லனாகும் கமல்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு