மாமன்னன் படத்திற்கு மக்கள் கொடுத்த மாபெரும் வெற்றி.. இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா
மாமன்னன்
உதயநிதியின் கடைசி திரைப்படமாக மாமன்னன் கடந்த வாரம் வெளிவந்தது. மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார்.
இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், லால் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து மாமன்னன் மூலம் தனது மூன்றாவது வெற்றி படத்தை மாரி கொடுத்துள்ளார்.
இந்த வெற்றிக்கு பரிசாக இயக்குனர் மாரி செல்வராஜுக்கு புதிய கார் ஒன்றை உதயநிதி வழங்கினார்.
வசூல் சாதனை
தொடர்ந்து தமிழகத்திலும், உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வரும் மாமன்னன் கடந்த 9 நாட்களில் உலகளவில் ரூ. 54 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும், தமிழகத்தில் மட்டுமே ரூ. 41 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இதுவே உதயநிதியின் கெரியரில் தி பெஸ்ட் கலெக்ஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி வைல்ட் கார்டு வின்னர் இவர் தான்.. யாருனு நீங்களே பாருங்க

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
