மூன்று நாட்களில் மாமன்னன் படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
மாமன்னன்
உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.
இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த 29ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த இப்படம் மாபெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது.
முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் இப்படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
மூன்று நாள் வசூல்
அதன்படி, மாமன்னன் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் சுமார் ரூ. 25 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் மாமன்னன் உதயநிதியின் கேரியரில் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ளது.
மாமன்னன் படத்திற்காக ஃபகத் ஃபாசில் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
