சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?- மாரிமுத்து ஓபன் டாக்
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல்.
ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தில் மருமகள்களாக நுழைந்து கஷ்டப்படும், தங்களது உரிமைகளை பெற போராடும் பெண்களை சுற்றிய ஒரு தொடர்.
அண்மையில் இந்த தொடரில் ஆதிரை-கரிகாலன் திருமண காட்சிகள் பரபரப்பாக ஓட TRPயும் டாப்பில் வந்தது. இதனால் தொடரில் அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகள் அமைய ரசிகர்களும் பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள்.
மாரிமுத்து ஓபன் டாக்
இந்த தொடரில் குணசேகரன் வேடத்தில் பயங்கர வில்லன் போல் நடித்து வருபவர் தான் மாரிமுத்து. இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வந்தது குறித்து பேசியுள்ளார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது, ஆனால் பிறகு அந்த பக்கம் செல்லலாம் என இருந்தேன்.
திடீரென தான் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க திருச்செல்வம் என்னிடம் பேசினார், அவர் இயக்கிய கோலங்கள் சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றது எனக்கு தெரியும்.
அதனாலேயே அவருடைய சீரியலில் நடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனாலும் அவர் என்னிடம் 3 மணி நேரம் தொடர்ந்து கதையை சொன்னார்.
அந்த கதையை கேட்டு தான் உறுதியாக இந்த சீரியலில் நடித்து தான் ஆக வேண்டும் என்று நினைத்ததாக அவர் பேசியுள்ளார்.
சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது?