மாவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இப்படி தான் இருக்கும்.. திரையரங்கம் அதிர போகிறது
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தின் மூலம் சிறந்த அறிமுக இயக்குனர் என ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதித்த இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அதிதி ஷங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விருமன் படத்தை தொடர்ந்து மாவீரன் திரைப்படம் அதிதி ஷங்கருக்கு மீண்டும் ஒரு வெற்றியை தேடி தரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சரிதா, சுனில், மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
கிளைமாக்ஸ் காட்சி
இந்நிலையில், வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது. மாவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுவதும் சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ளார்களாம். இந்த சிங்கிள் ஷாட் காட்சியில் தனது நடிப்பினால் சிவகார்த்திகேயன் மிரட்டியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படத்தில் ஃபாண்டஸி கலந்த சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் மாவீரன் எப்படி இருக்க போகிறது என்று.
ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த மாமன்னன் படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
