மெட்ராஸ் சமையல் 'ஸ்டெஃபி' மொத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?
சமையல் கற்றுக்கொள்ள youtube பார்ப்பவர்கள் தான் அதிகம். அப்படி youtubeல் பிரபலமாக இருக்கு தமிழ் சமையல் சேனல்களில் ஒன்று 'மெட்ராஸ் சமையல்' சேனல்.
2015ல் தொடங்கப்பட்ட இந்த சேனலில் தற்போது 6.08 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்து, அதன் பிறகு HCL நிறுவனத்தில் சில வருடங்கள் வேலை செய்த ஸ்டெஃபி, அதன் பிறகு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.

அதன் பிறகு அவரது கணவர் கொடுத்த ஐடியாவால் youtube சேனல் தொடங்கி சமையல் வீடியோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார். தற்போது தமிழ் இணையத்தில் மிகவும் பாப்புலர் ஆன சேனல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது மெட்ராஸ் சமையல்.

ஸ்டெஃபிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. குழந்தையை பார்த்துக்கொண்டே தான் அவர் சமையல் வீடியோ ஷூட் செய்து எடிட் செய்து வெளியிடும் வேலைகளையும் செய்து வருகிறாராம்.

சம்பளம்
மெட்ராஸ் சமையல் சேனல் மூலமாக மாதம் சுமார் 2 லட்சம் ருபாய் வரை ஸ்டெஃபி வரை வருமானம் வருகிறது.
அதே போல அவர் Steffi Ulagam என்ற பர்சனல் vlog சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் மூலமாகவும் அவருக்கு மாதம் 1 லட்சம் வரை வருமானம் வரும் என கூறப்படுகிறது.

தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan