நானும் பெண் பிள்ளையை பெற்றவன் தான், இதை மட்டும் அறிவிங்க- கையெடுத்து கும்பிட்ட மதுரை முத்து
மாணவி ஆர்த்தி
இந்திய மக்கள் அனைவருமே இதற்கு ஒரு தீர்வே இல்லையா என முக்கியமான விஷயத்திற்காக வருத்தப்பட்டும், கோபப்பட்டும் வருகிறார்கள்.
ஆனால் மாநில அரசுகளும், மத்திய அரசும் இந்த விஷயத்தை அதிகமாக கவனம் கொள்வதாக தெரியவில்லை. புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள சோலை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணன்-மைதிலி தம்பதி. இவர்களுக்கு 9 வயதி ஆர்த்தி என்ற மகள் இருக்கிறார்.
இவர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 2ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமாக அவரை பெற்றோர்கள் தேடியிருக்கிறார்கள், மகள் கிடைக்காததால் போலீஸிலும் புகார் அளித்துள்ளனர்.
4 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை, பின் ஒரு கால்வாயில் சாக்கு மூட்டையில் சடலமாக ஆர்த்தி என்ற சிறுமி கிடைத்திருக்கிறார். இந்த விஷயம் மக்கள் அனைவருக்குமே கடும் துக்கத்தை கொடுத்துள்ளது, இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா என்ற கோபம் அனைவரிடத்திலும் உள்ளது.
மதுரை முத்து
மதுரை முத்து இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த வழக்கில் புதுச்சேரி வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்த மதுரைமுத்து தமிழகத்திலும் வழக்கறிஞர்கள் இதுபோல் அறிவித்தார் பெற்றோர்கள் உங்களுக்கு காலம் முழுக்க நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு துபாயில் கொடுப்பது போல கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கற்பழித்தவர்களையும் நடுரோட்டில் வைத்து கல்லால் அடித்து கொள்வது போல இல்லை என்றாலும் நம்முடைய நாட்டில் இந்த குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.