அம்மா, மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து.. அனைவரையும் கண்கலங்க வைத்த வீடியோ
மதுரமுத்து
சின்னத்திரையில் துவங்கி வெள்ளித்திரை வரை பிரபலமானவர் மதுரை முத்து. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை செய்து மக்களை பொழுதுபோக்கி வருகிறார். இவருடைய கடி ஜோக்குகள் கேட்கவே ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
அந்த கடி ஜோக்கை சொல்லிவிட்டு, அதை சமாளிக்க இவர் சொல்லும் நகைச்சுவை தான் அல்டிமேட் ஆக இருக்கும். நகைச்சுவையில் கொடிகட்டி பறக்கும் கலைஞர்களில் ஒருவரான மதுரை முத்து, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு 10ல் நடுவராக பணியாற்றி வருகிறார்.
கண்கலங்க வைத்த வீடியோ
இந்த நிலையில், சமீபத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில், எமோஷனலான தருணம் நடந்துள்ளது. இதில், மதுரை முத்து தனது அம்மா மற்றும் மனைவிக்கு கோவில் கட்டுவதாக நிஷா கூறியுள்ளார்.
மதுரை முத்துவின் முதல் மனைவி லேகா கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மதுரை முத்துவின் வாழ்க்கையை திருப்பிப்போட்டது. இதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து, லேகாவின் தோழி நீத்து என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தனது முதல் மனைவி மற்றும் பெற்றாரின் நினைவாக தான் இந்த கோவிலை கட்டி வருகிறாராம் மதுரை முத்து. அனைவரையும் கண்கலங்க வைத்த அந்த வீடியோ இதோ..