விபத்தில் உயிரிழந்த முதல் மனைவியின் நினைவு நாள்- மதுரை முத்து போட்ட பதிவு
மதுரை முத்து
மதுரை முத்து, சிறுவயதில் இருந்தே மேடைப் பேச்சாளராக இருந்து இருக்கிறார், பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார்.
பின் தொலைக்காட்சி பக்கம் வந்த இவர் கலக்கப்போவது யாரு, அசதபோவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதை வென்றுள்ளார். திரைப்படங்கள், சீரியல்கள் என சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது கூட மோதலும் காதலும் சீரியலில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார்.
குடும்பம்
மதுரை முத்து அவர்கள் லேகா என்பவரை திருமணம் செய்திருந்தார், இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது.
ஆனால் லேகா 2016ம் ஆண்டு பிப்ரவர மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார், அப்போது அவருக்கு வயது 32 தான்.
பின் மதுரை முத்து சில மாதங்கள் கழித்து தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை 2வது முறையாக திருமணம் செய்துகொண்டார்.
இதற்கு பலர் விமர்சித்தார்கள், ஆனால் தனது குழந்தைகளுக்காக தான் இந்த திருமணம் என மதுரை முத்து கூறியிருந்தார். இந்த நிலையிவ் மதுரை முத்து தனது முதல் மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு 8ம் ஆண்டு நினைவுநாள் என பதிவிட்டுள்ளார்.