விஜய் டிவியின் புதிய சீரியல் மகளே என் மருமகளே சீரியலின் Launch Date
மகளே என் மருமகளே
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி.
இதில் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்களும் அதிகம் ஒளிபரப்பாகி வருகிறது. சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், அய்யனார் துணை, சின்ன மருமகள், மகாநதி போன்ற தொடர்கள் டாப் டிஆர்பியில் ஓடிக் கொண்டிருக்கிறது.
புதிய சீரியல்
இந்த நிலையில் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருந்த நிலையில் புரொமோவும் வந்திருந்தது.
பாக்கிய லட்சுமி சீரியல் புகழ் ரேஷ்மா, நீ நான் காதல் புகழ் வர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மகளே என் மருமகளே என்ற சீரியல் விரைவில் தொடங்க உள்ளது.
ஏற்கெனவே புரொமோ வெளியான நிலையில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்க உள்ளதாம், ஆனால் நேரம் தெரியவில்லை.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
