அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு எவ்வளவு தான் முடிந்துள்ளது, அடுத்து என்ன?- முதன்முறையாக கூறிய இயக்குனர்
குட் பேட் அக்லி
நடிகர் அஜித் இப்போது தனது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.
இப்போது அஜித்தின் இன்ட்ரோ பாடல் படமாக்கப்பட்டு வருவதாகவும், அங்கு ஜுன் 7ம் தேதி வரை படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஐப்பான் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இடையில் அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நிறைய செய்ய உள்ளாராம்.

முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல், சன் டிவியில் TRPயில் டாப்பில் இருக்கும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த சீரியல் தெரியுமா?
இயக்குனர் பதில்
சமீபத்தில் ஒரு பேட்டியில் விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ்திருமேனி பேசுகையில், படத்தின் 90% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள 10 % படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்பட படப்பிடிப்பிற்கு மகிழ்திருமேனி அதிக காலம் எடுத்துக் கொள்வதாக வந்த தகவலுக்கு, படத்தின் சில காட்சிகள் அஜித்திற்கு திருப்தியை தரவில்லை என்றால் அதை மீண்டும் ரீ-சூட் எடுத்து தான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
