மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... இயக்குனர் வெளியிட்ட போட்டோ, செம வைரல்
மகாநதி சீரியல்
விஜய் டிவியில் படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று மகாநதி.
குளோபல் விவ்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த சீரியல் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வார எபிசோட் புரொமோவில், காவேரி இத்தனை நாள் மறைத்து வைத்த உண்மையை தனது அம்மாவிடம் கூறுகிறார். தான் கர்ப்பமாக இருப்பதை கூற சாரதா அதிர்ச்சியானதோடு விஜய்யை பார்க்க வேண்டும் என்கிறார்.
அடுத்த ஸ்டோரி
இன்றைய எபிசோடில், நிவின்-குமரன், விஜய்யை தேடி அலைகிறார்கள். அவரது வீட்டிற்கு சென்று விசாரிக்க பாட்டி மோசமாக பேசி அவர்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார்.
இருவரும் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை கூற காவேரி விஜய்க்கு Voice Message அனுப்புகிறார். அதைக்கேட்டு விஜய் சந்தோஷப்பட்டாலும் காவேரி கதற வைக்க முடிவு செய்கிறார்.

வீட்டைவிட்டு Hostel சென்ற நிலா, சோழனிடம் அவர் கூறிய கோபமான வார்த்தை... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ
நாளைய எபிசோட் புரொமோவில், விஜய் சாரதா வீட்டிற்கு வந்து அவரிடம் பேசுகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் பென்னட், விஜய் தனது Bagகுடன் சாரதா வீட்டின் முன் நிற்பது போன்ற போட்டோவை பதிவிட்டு Treat என கூறியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுக்கு தோன்றிய கதைக்களத்தை பதிவிட்டு வருகிறார்கள்.