1000 கோடி வசூல் செய்யுமா மகாராஜா.. இதுவரை இத்தனை கோடியா
மகாராஜா
2024ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் மகாராஜா திரைப்படம் கண்டிப்பாக இடம்பெறும். அந்த அளவிற்கு வித்தியாசமான திரைக்கதையில் இப்படத்தை கையாண்டு இருந்தார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக இருக்கும் சாச்சனா, இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். மேலும் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, முனீஸ்காந்த் என பலரும் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த மகாராஜா படம் தற்போது சீனாவில் 40 ஆயிரம் திரையரங்கில் வெளிவந்துள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில், 6 நாட்கள் பிரிமியர் ஷோவில் மகாராஜா படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகாராஜா படம் சீனாவில் 6 நாட்கள் பிரிமியர் ஷோவில் இருந்து மட்டுமே, ரூ. 5.4 கோடி வரை வசூல் செய்துள்ளது.
சீனாவில், அதுவும் 40 ஆயிரம் திரையரங்கில் மகாராஜா வெளியாகிறது என தகவல் வந்தவுடன், கண்டிப்பாக ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்கிற சாதனையை, இப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பொறுத்திருந்து பார்ப்போம் அனைவரும் எதிர்பார்த்தது போல், மகாராஜா ரூ. 1000 கோடி வசூல் செய்து சாதனை படைக்கிறதா என்று.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
