இரண்டு நாட்களில் மகாராஜா சீனாவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
மகாராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் தற்போது சீனாவில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
இயக்குனர் நித்திலன் சுவாமி நாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாராஜா.
இப்படத்தில் சாச்சனா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் இப்படம் வெற்றியடைந்த நிலையில், ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து.
இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் தற்போது சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரிமியர் மற்றும் இரண்டு நாட்கள் வசூல் சேர்த்து இதுவரை ரூ. 25 கோடிக்கும் மேல் மகாராஜா படம் வசூல் செய்துள்ளது.