கர்ப்பமாக இருக்கும் மகராசி சீரியல் நடிகை மௌனிகா.. அவரே வெளியிட்ட மகிழ்ச்சியான பதிவு
மௌனிகா தேவி
விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை மௌனிகா தேவி. இந்த சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

அவளும் நானும் சீரியலை தொடர்ந்து பூவே செம்பூவே, மகராசி ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிகை மௌனிகா தேவி சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியான பதிவு
கடந்த 2021ஆம் ஆண்டு VK என்பவரை மௌனிகா தேவி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, "It’s a secret no more…our bundle of joy is on the way! Yes we 3 now" என பதிவிட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் நடிகை மௌனிகா தேவிக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கமெண்ட்ஸில் தெரிவித்து வருகிறார்கள்.
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri