ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாராகி பல கோடி வசூல் வேட்டையில் மகாவதார் நரசிம்மா
மகாவதார் நரசிம்மா
விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதை எல்லோருக்குமே தெரியும்.
அந்த விஷயத்தை மையமாக கொண்டு கன்னட மொழியில் தயாரான படம் தான் மகாவதார் நரசிம்மா. பிரகலாதனின் கதையை கொண்டு உருவான இந்த அனிமேஷன் திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் கடந்த ஜுலை 25ம் தேதி வெளியாகி இருந்தது.
பின் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கினிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அஸ்வின் குமார் இயக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 324 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம். படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.