மஹா அவதார் நரசிம்மா இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ
மஹா அவதார் நரசிம்மா
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து உருவான திரைப்படம் மஹா அவதார் நரசிம்மா. கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படத்தை இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கியிருந்தார்.
பிரமாண்டமான அனிமேஷன் திரைப்படமாக உருவான இப்படத்தை hombale films தயாரித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம், நாளுக்கு நாள் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.
வசூல் அறிவிப்பு
மஹா அவதார் நரசிம்மா திரைப்படத்தின் வசூல் குறித்து hombale films தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், 5வது வாரத்திற்குள் நுழையும் மஹா அவதார் நரசிம்மா திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 278 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, இந்தியாவில் வெளிவந்த ஒரு அனிமேஷன் திரைப்படத்தின் வரலாறு காணாத வசூல் சாதனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
278 CRORES+ Worldwide Gross & Counting…💥
— Hombale Films (@hombalefilms) August 22, 2025
The historic roar of #MahavatarNarsimha continues, entering the 5th week of glory! 🦁🔥#Mahavatar @hombalefilms @AshwinKleem @kleemproduction @VKiragandur @ChaluveG @shilpaadhawan @SamCSmusic @MahavatarTales @samaymahajan… pic.twitter.com/wUGRXUizqk