டோலிவுட்டை தவிர மற்ற திரைப்பட துறைகளில் நடிக்கமாட்டேன்.. விமர்சனங்களுக்கு உள்ளாகிய மகேஷ் பாபுவின் பேச்சு !
மகேஷ் பாபு
நீடா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் மகேஷ் பாபு. பின்னர், 1999-ம் ஆண்டு வெளியான ராஜ குமாருடு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார்.
அது மட்டும் இல்லாமல் இந்த படம் அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்று கொடுத்தது. பின்பு, அவர் தன் நடிப்பு திறமையின் மூலம் டோலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இதன் மூலம் இவருக்கு பாலிவுட்டில் நடிக்க பல பட வாய்ப்புகள் வந்ததாக மகேஷ் பாபு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
சர்ச்சை பேச்சு
அந்த பேட்டியில் அவர், இந்தியில் நடிக்க எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்ததாகவும் ஆனால் எனக்கு அதில் நடிக்க விருப்பம் இல்லை எனவும், தெலுங்கு திரையுலகில் எனக்கு கிடைக்கும் வெற்றி மற்றும் பாராட்டுக்கள் போதும் எனவும், டோலிவுட்டைத் தவிர வேறு எந்தத் திரைப்படத் துறைகளுக்கும் போக மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
தற்போது ,மகேஷ் பாபுவின் இந்த கருத்துக்கள் விமர்சனங்களை பெற்று வருகிறது, மேலும் இந்த கருத்து
திரையுலகினரின் கவனத்தையும் அவரது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu
