தளபதி 66ல் கெஸ்ட் ரோலில் சூப்பர்ஸ்டார் நடிகர்! யாருமே எதிர்பார்காத ஒன்று
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கு, தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவருமே தெலுங்கு சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்றாலும் இது தமிழ் படம் தான் என விஜய் முன்பு பேட்டி அளித்திருந்தார். இருப்பினும் படத்தில் தெலுங்கு நட்சத்திரங்கள் தான் அதிகம் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது.

கெஸ்ட் ரோலில் மகேஷ் பாபு?
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தளபதி 66 படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என தற்போது தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.
இயக்குனர் வம்சி மகேஷ் பாபுவை கெஸ்ட் ரோலில் நடிக்க அணுகியதாகவும், நட்புக்காக மகேஷ் பாபு உடனே ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் விக்ரம் படத்தில் சூர்யா சில நிமிடங்களே திரையில் தோன்றியது நல்ல ரெஸ்பான்ஸ் பெற்ற நிலையில் தற்போது தளபதி66 படத்தில் ஒரு உச்ச நடிகர் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்கிற தகவல் வைரலாகி உள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமண புடவையில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா?