துப்பாக்கி 2.. விஜய்க்கு வில்லன் இவரா? எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்ட கூட்டணி
துப்பாக்கி 2 பற்றி முருகதாஸ் சமீபத்தில் பேசி இருக்கும் விஷயம் வைரல் ஆகி வருகிறது.
துப்பாக்கி 2
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கிறார் அவர். இந்தப்படம் லோகேஷ் பாணியில் மாஸ் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை முடித்தபிறகு முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் - முருகதாஸ் கூட்டணி பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் நிலையில் துப்பாக்கி 2 எப்போது வரும் என ரசிகர்கள் வருடக்கணக்கில் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வில்லன் இவரா..
துப்பாக்கி 2 படத்தில் வில்லனாக தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவை நடிக்க வைக்க இருவரும் ஒப்புக்கொண்டிருப்பதாக முருகதாஸ் தெரிவித்து இருக்கிறார்.
தமிழில் விஜய் ஹீரோ மகேஷ் பாபு வில்லன் ஆக நடிக்கின்றனர். ஆனால் தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோ விஜய் வில்லன் ரோலில் நடிப்பதாக தெரிகிறது. இருப்பினும் இந்த படம் தொடங்க இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்றே தெரிகிறது.
நடிகர் கவுண்டமணி அவர்களின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
