கமல் நடிப்பை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை.. விக்ரம் படத்தை பார்த்து வியந்த மகேஷ் பாபு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் விக்ரம் படம் 400 கோடி வசூலை கடந்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்து இருக்கிறது.
இந்த படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் அதிகம் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மகேஷ் பாபு விக்ரம் படத்தை பார்த்து வியந்து ட்விட்டரில் பேசி இருக்கிறார்.
"விக்ரம் பிளாக்பஸ்டர் படம். இயக்குனர் லோகேஷ் உங்களை சந்தித்து விக்ரம் படம் உருவானது பற்றி பேச விரும்புகிறேன். விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் ஜொலித்து இருக்கின்றனர். இதை விட சிறப்பாக நடிக்க முடியாது. அனிருத் மியூசிக் சிறப்பு."
"இறுதியாக லெஜெண்ட் கமல்ஹாசன் நடிப்பை பற்றி விமர்சிக்க எனக்கு தகுதி இல்லை. உங்கள் ரசிகனாக நான் சொல்கிறேன், இது ஒரு பெருமையான தருணம்" என கூறி இருக்கிறார்.


சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
