நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு, போலீசில் சிக்கிய பணிப்பெண்! இவ்வளவு பணம் திருடினாரா?
ஷோபனா
நடிகை ஷோபனா பரதநாட்டிய கலைஞராகவும் நடிகையாகும் புகழ்பெற்றவர். அவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் உடன் நடித்து இருக்கிறார்.
தற்போது சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அவர் வசித்து வருகிறார். பல அடுக்கு கொண்ட அவரது வீட்டிலேயே பரதநாட்டிய பள்ளியையும் நடத்தி வருகிறார்.
ஷோபனாவின் தாயரை கவனிக்க விஜயா என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறார் அவர். கடந்த சில மாதங்களாக வீட்டில் பணம் காணாமல் போவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. அது பற்றி ஷோபனா தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
திருட்டை ஒப்புக்கொண்ட பெண்
அது பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது பணியாளர் பெண் தான் திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் வறுமை காரணமாக திருடியதாக கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதனால் ஷோபனா அவரை மன்னிப்பு மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொண்டாராம்.
அந்த பெண் இதுவரை 41 ஆயிரம் ருபாய் வரை திருடி இருக்கிறார். அதை டிரைவர் மூலமாக ஊரில் இருக்கும் தனது மகளுக்கு Gpay செய்ய வைத்திருக்கிறார். திருடிய பணத்தை அடுத்து சம்பளத்தில் பிடித்துக்கொள்வதாக ஷோபனா கூறிவிட்டாராம்.
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் பாருங்க

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
