20 வயதில் மகன்.. 49 வயதில் 37 வயது நடிகருடன் இரண்டாம் திருமணம் செய்யப்போகும் நடிகை மலைகா அரோரா
மலைகா அரோரா முதல் திருமணம்
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மலைகா அரோரா. இவர் கடந்த 1998ஆம் ஆண்டு சல்மானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு அர்ஹான் கான் என 20 வயதில் ஒரு மகனும் உள்ளார். 19 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண வாழக்கை கடந்த 2017லில் விவாகரத்து மூலம் முடிவுக்கு வந்தது.
அர்ஜுன் கபூருடன் காதல்
இதன்பின் பிரபல இளம் நடிகரும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார் நடிகை மலைகா அரோரா. இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் கூட அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
ஆனால், இதுவரை தங்களுடைய காதல் குறித்தும், திருமணம் குறித்தும் இருவரும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
திருமணத்திற்கு ஒகே
இந்நிலையில், தற்போது நடிகை மலைகா அரோரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ' நான் சம்மதம் தெரிவித்துவிட்டேன் ' என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அர்ஜுன் கபூருடன் இரண்டாம் திருமணத்திற்கு தான் இந்த பதிவு மலைகா அரோரா வெளியிட்டுள்ளார் என அனைவரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
