கூலி படத்தில் இணைந்த உச்ச நடிகர்!! ஜெயிலர் படத்தை மிஞ்சுரும் போலயே
கூலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு கூலி என்று தலைப்பு வைத்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எகிறும் எதிர்பார்ப்பு
ரஜினிகாந்தின் கூலி படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழல், மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் திலீப் இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
You May Like This Video