மலையாள சினிமாவை ராஜ்ஜியம் செய்துவரும் நடிகர் மோகன்லால் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மோகன்லால்
மலையாள சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அப்படி தான் எனலாம்.
தமிழில் இருவர், உன்னை போல் ஒருவன், ஜில்லா, காப்பான் போன்ற படங்களில் மோகன்லால் நடித்துள்ளார். அதிலும் அண்மையில் நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ப்ருத்விராஜ் இயக்த்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார், லூசிஃபர் படத்தில் இரண்டாம் பாகமாக உருவாக்கும் இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
சொத்து மதிப்பு
நடிகராக மட்டுமில்லாமல் சொந்த தொழிலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சினிமா திரையரங்கம், கல்வி நிறுவனங்கள், உணவகம் உள்பட பலவற்றை கவனித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி சின்னத்திரையில் தொகுப்பாளராக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இவர் ரூ. 18 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.
இப்படி சினிமா, சொந்த தொழில் என சம்பாதிக்கும் மோகன்லால் முழு சொத்து மதிப்பு ரூ. 450 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
