17 வயதில் தோன்றிய கனவு, இன்றைய சென்சேஷ்னல் நஸ்லீன் ஸ்டார் ஆன கதை...

By Tony Nov 12, 2026 08:37 AM GMT
Report

நஸ்லீன்

Actor Naslen Biography: நஸ்லீன் இன்று இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர் ஆகிவிட்டது.

அந்த அளவிற்கு மலையாள சினிமாவில் செல்லப்பிள்ளையாக இருந்த இவர் ப்ரேமலு மூலம் தென்னிந்திய சினிமாவில் செல்லபிள்ளையாக ஆகிவிட்டார், தற்போது லோகா, சீன் மூலம் இந்தியாவே கொண்டாடும் நடிகராகிவிட்டார்.

17 வயதில் தோன்றிய கனவு, இன்றைய சென்சேஷ்னல் நஸ்லீன் ஸ்டார் ஆன கதை... | Malayalam Actor Naslen Biography

நஸ்லீன் தன் 17 வயதிலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசையாக இருக்க, வீட்டிலோ வழக்கம் போல் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட, நஸ்லீனுக்கு ஆசை என்னவோ சினிமா மேல் தான் இருந்துள்ளது, அதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமா நோக்கி சென்றுள்ளார்.

அதிலும் தான் ஒரு தீவிர மம்முட்டி ரசிகர் என்பதால், மம்முட்டி நடித்த மதுரராஜா படத்தில் ஜுனியர் ஆர்டிஸ்ட் ஆக வேலை பார்த்த இவர், அதை தொடர்ந்து இயக்குனர் கிரிஷ் கண்ணில் பட்டு, தண்ணீர் மத்தும் தினங்கள் என்ற படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

17 வயதில் தோன்றிய கனவு, இன்றைய சென்சேஷ்னல் நஸ்லீன் ஸ்டார் ஆன கதை... | Malayalam Actor Naslen Biography

அதில் நடித்த பல சிறுவர்களில் இவர் தனியாக கவனம் பெற, அதை தொடர்ந்து சூப்பர் சரண்யா, நெய்மர், ஜோ அண்ட் ஜோ, ஹோம் என பல படங்களில் தொடர்ந்து நடித்து மலையாள ரசிகர்கள் தாண்டி OTT வளர்ச்சியால் ஒட்டு மொத்த தென்னியாவே கொண்டாடும் நடிகராகிறார்.

இந்த மகுடத்திற்கு எல்லாம் மகுடமாக இவர் நடிப்பில் வெளியான ப்ரேமலு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆக, அதை தொடர்ந்து ப்ரேமலு 2 பூஜை போடப்பட்டது, அதே நேரத்தில் ஆழப்புழா ஜிம்கானா வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிறது.

நஸ்லீன் இந்த நேரத்துல் நாம் இன்னும் இதுபோல் வெறும் காமெடி செய்யும் கதாபாத்திரம் நடிக்க வேண்டுமா? என யோசித்து ப்ரேமலு 2 என்ற ஜாக்பாட்டை உதறிவிட்டு மாலிவுட் டைம்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

17 வயதில் தோன்றிய கனவு, இன்றைய சென்சேஷ்னல் நஸ்லீன் ஸ்டார் ஆன கதை... | Malayalam Actor Naslen Biography

மாலிவுட் டைம்ஸ் தோல்விபடமாக அமைய, எல்லோரும் நஸ்லீனை இவருக்கு தேவையா, ஒழுங்காக ப்ரேமலு 2 நடித்திருந்தால் செம ஹிட் கிடைத்திருக்கும் என சொல்ல, OTT-ல் மாலிவுட் டைம்ஸ் வந்தவுடன் எல்லோரும் கொண்டாட தொடங்குகின்றனர்.

ஒரு நடிகனாக நஸ்லீன் இந்த படத்தில் பல படிகள் ஏறிவிட்டார், நஸ்லீன் முடிவு சரியே என அப்படியே பேசிய வாய்கள் புகழ ஆரம்பிக்க, அந்த புகழ்ச்சி அடங்குவதற்குள் சூர்யாவுக்கே வில்லனாக் இவர் போட்ட சீன் தான் தற்போது டாக் ஆப் தி டவூட் ஆகி, இன்று இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலிக்க தொடங்கியுள்ள நஸ்லீன் அடுத்த வாரமே பேச்சுபர் பார்ட்டி படத்தை இறக்குகிறார், இப்படி நஸ்லீன் தன் திரைப்பயணத்தை தானே முடிவு செய்து வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US