பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சலீம் குமார் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்தார்.
நேற்று காலை அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மரணம்
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சலீம் குமார் மரணம் அடைந்துள்ளார். அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உருக்கமாக அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சலீம் குமார் சில வருடங்களுக்கு முன்பு கல்லிரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் சலீம் குமார் சில படங்கள் நடித்து இருக்கிறார்.
