Malayalam actor Sreenath Bhasi divorced his wife: மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஸ்ரீநாத் பாஸி, தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநாத் பாஸி
மஞ்சுமல் பாய்ஸ், கும்பலங்கி நயிட்ஸ் மற்றும் மஞ்சுமல் பாய்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீநாத் பாஸி. அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் நடிகர் ஸ்ரீநாத், தற்போது தனது மனைவியை விட்டு பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

விவாகரத்து
நடிகர் ஸ்ரீநாத் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தபோது, அவருடன் பணியாற்றிய ரீத்து சகரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் தற்போது விவாகரத்து செய்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள பதிவில், "விவாகரத்துக்கு பின் நான் இப்போது என் பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். எனது மனைவியை பிரிந்துவிட்டேன். விவாகரத்தானதை கூட ரகசியமாக வைத்திருந்தேன். இப்போது அதை சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டதால் தெரிவிக்கின்றேன்" என கூறியுள்ளார்.
