மாமன்னன் தான் எனது கடைசி திரைப்படம் - ட்ரோப் ஆனது கமல் உதயநிதி கூட்டணி
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின்.
ராஜேஷ் இயக்கத்தில் வெளியான "ஓகே ஓகே" படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார்.

கமல் உதயநிதி கூட்டணி
சமீபத்தில் நடந்த ரெட் ஜெயண்ட் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் உதயநிதி ஒரு புதிய திரைப்படம் நடிக்கப்போவதாக கமல் அறிவித்தார்.

அரசியல் மற்றும் சினிமா என்று பிஸியாக இருந்த வந்த உதயநிதி, தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் பேட்டி அளித்த அவர், " கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த படத்தை நான் பண்ணவில்லை. மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படம் தான் எனது கடைசி படமாக இருக்கும். இனி நான் படங்களில் நடிக்க மாட்டேன் " என்று கூறினார்.
நடிகர் விக்ரமின் மனைவி சைலஜாவை பார்த்துள்ளீர்களா.. இதோ குடும்ப புகைப்படம்