அனுஷ்கா இல்லை.. அருந்ததி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான்
அருந்ததி
2009ல் வெளியாகி அனுஷ்கா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் தான் அருந்ததி. ஹாரர் திரில்லர் படம் என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் அவரது கெரியரை உச்சத்திற்கே கொண்டு சென்று நிறுத்தியது அந்த படம். அதற்கு பிறகு தான் அனுஷ்கா female centric கதைகளை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கொடி ராமகிருஷ்ணா இயக்கிய அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அனுஷ்கா இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
விலகிய மலையாள நடிகை
முதலில் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவர் திடீரென விலகியதால் தான் அதற்கு பிறகு அனுஷ்கா உள்ளே வந்து இருக்கிறார்.
மம்தா மோகன்தாஸ் அந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய தவறு என இயக்குனர் S.S ராஜமௌலி அவரிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
"இவ்வளவு பெரிய படத்தை இந்த தயாரிப்பாளரால் எடுத்து முடிக்க முடியாது என மேனேஜர் சொன்னதை கேட்டு அந்த முடிவை எடுத்துவிட்டேன்" என மம்தா மோகன்தாஸ் விளக்கம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.





ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
