தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இணைந்த லோகேஷ் பட நாயகன்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.
இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
அப்படத்தை தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் வெளியாக இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

கேப்டன் மில்லர்
இந்நிலையில் தற்போது தனுஷின் அடுத்த திரைப்படம் கேப்டன் மில்லர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஆம், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள அப்படம் மிகவும் வித்தியசமான கதைகளத்தில் உருவாக இருக்கிறது.
மேலும் தற்போது அப்படம் குறித்த முக்கைய அப்பேட் வெளியாகியிருக்கிறது. ஆம், மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

42 வயது திருமணமாகாத தமிழ் நடிகை.. நித்யானந்தாவை அடிக்கடி சந்திக்கிறாரா