முன்னணி நடிகருடன் சூப்பர் சிங்கர் மானசி.. அட, யாருனு நீங்களே பாருங்க
சூப்பர் சிங்கர் மானசி
சூப்பர் சிங்கர் சீசன் 8 போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மானசி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மானசி, தான் பாடும் வீடியோ அல்லது தனது புகைப்படங்களை பதிவு செய்வார்.

துல்கருடன் மானசி
அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நடிகர் துல்கர் சல்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு துல்கர் சல்மான் வந்திருந்தபோது, அவரை சந்தித்து மானசி இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் என்று தெரிகிறது.

ஆம், இந்த வாரம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ஹே சினாமிகா படத்திற்காக துல்கர் சல்மான், அதிதி ராவ், பிருந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் தனது தங்கை மற்றும் குடும்பத்துடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படம், இதோ...