பிக் பாஸ் விதிமுறையை மீறி மணி, ரவீனா செய்த ரகசிய செயல்.. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா
விதி மீறல்கள்
பிக் பாஸ் வீட்டிற்குள் இதற்குமுன் நடந்த சீசன்களில் பலமுறை விதிமீறல்கள் நடந்துள்ளது. அதை கண்டித்து வார இறுதியில் கமல் ஹாசன் பேசுவார்.
குறிப்பாக ஹவுஸ் மேட்ஸ் இடையே ரகசியமாக மைக் ஆஃப் செய்து வைத்துவிட்டு பேசுவது, கேமராக்கு தெரியாமல் கையில் எழுதி காட்டுவது போன்ற பல விதிமீறல்கள் நடந்துள்ளது.
அதே போல் தற்போது பிக் பாஸ் 7 நிகழ்ச்சிலும் இருவர் வீதியை மீறியுள்ளனர். அவர்கள் வேறு யாருமில்லை, மணி மற்றும் ரவீனா தான்.
ரகசிய செயல்
ஆம், மணி தன்னுடைய ரகசியமான விஷயத்தை சொல்லமுடியாது என கூறி, ரவீனாவின் கையில் எழுதி காட்டுகிறார். இதை வெளிப்படையாக பேச முடியாது என்றும் அதில் கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் விதிமுறையை மணி மற்றும் ரவீனா மீறியதால் கண்டிப்பாக வார இறுதியில் கமல் ஹாசன் இதை கண்டிப்பார் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Mani breaks the Bigg Boss rule by having a secret conversation with Raveena by writing on her palm. A matter for the host to question on the weekend.#BiggBossTamil7 pic.twitter.com/XWGMRASur4
— Bigg Boss Follower (@BBFollower7) October 2, 2023