வேள்பாரி படம் குறித்து பேசிய மணி ரத்னம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்று இப்படத்தின் ப்ரீஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பல கேள்விகளுக்கு பொன்னியின் செல்வன் படக்குழு பதிலளித்து வந்தனர்.
வேள்பாரி
அதில் பத்திரிகையாளர் ஒருவர் ' பொன்னியின் செல்வனை போல் வேள்பாரி கதையும் படமாக திரையில் வருமா ' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு இயக்குனர் மணி ரத்னம் ' என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அதற்கான முயற்சியில் இருக்கிறார் ' என கூறினார்.
அந்த சமயத்தில் அருகில் இருந்த நடிகர் விக்ரம், ஷங்கர் சார் இப்படத்தை இயக்குனர் என்பது போல் கூறிவிட்டார்.

இதனால் ஷங்கர் தான் வேள்பாரி கதையை படமாக்க போகிறார் என உறுதியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
திருமணம் குறித்து பேசிய வலிமை பட நடிகை.. காதல் முறிவுக்கு பின் இப்படியொரு முடிவா