ஹிந்தியில் கேட்கப்பட்ட கேள்வி, கைத்தட்டலால் நிரம்பிய அரங்கம்.. மணிரத்னம் சொன்ன பதில் என்ன?
Thug Life
தமிழ் சினிமாவில் கடைசியாக வெளியான பெரிய நடிகரின் படம் என்றால் அது சூர்யாவின் ரெட்ரோ படம்.
இப்போது அடுத்து அதாவது வரும் ஜுன் 5ம் தேதி பல முன்னணி நடிகர்கள் ஒன்றாக நடித்துள்ள தக் லைப் திரைப்படம் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை.
மணிரத்னம்
இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் சென்னை, மும்பை, கேரளா என பல இடங்களில் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் மும்பை பிரஸ் மீட்டில் ஒருவர் இந்தியில் மிகவும் விரிவான கேள்வியை மணிரத்னத்திடம் எழுப்பினார். கேள்வி முடிந்ததும் மணிரத்னம் கமல்ஹாசனிடம் ஏதோ கேட்க உடனே கேள்வி கேட்டவர் ஆங்கிலத்தில் அந்த கேள்வியை கேட்டார்.
அதாவது தக் லைப் படம் தொடர்பாக கமல்ஹாசனை முதலில் சந்தித்த போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதே அந்த கேள்வி.
அதற்கு மணிரத்னம், பொதுவாக நான் இந்தியில் பேசுவதைக் கவனிக்கும் போது சப் டைட்டில் எங்கே இருக்கிறது என்பதை பார்ப்பேன், இப்போது சப் டைட்டில் இல்லாததால் கமலிடம் கேட்க வேண்டி இருந்தது என மணிரத்னம் பதில் கொடுத்துள்ளார். அவர் இப்படி பதில் கூறியதும் அரங்கில் கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.
பின் கமலிடம் சொல்லும் போது எப்படி உணர்ந்தேன் எனக் கேட்கிறீர்கள். இந்த கதை அப்படி அமையவில்லை, நானும் கமலும் நீண்ட காலமாகவே இந்த கதை குறித்தும் பேசி வந்தோம். இறுதியில் இந்த கதையை எடுக்கலாம் என முடிவு செய்தோம்.
இருவரும் ஒப்புக்கொண்டு அதன் பிறகே டெவலப் செய்தோம் என்றார்.

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
