நடிகர் மணிகண்டன் வாழ்க்கையில் இப்படி நடந்ததா.. 4 வருடம் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாரா
மணிகண்டன்
இன்றைய தமிழ் சினிமாவில் சென்சேஷனல் ஹீரோவாக இருக்கிறார் மணிகண்டன். இவர் விக்ரம் வேதா, காதலும் கடந்துபோகும் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி, பின் ஜெய் பீம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதன்பின் தொடர்ந்து குட் நைட், லவ்வர் மற்றும் சமீபத்தில் வெளிவந்த குடும்பஸ்தன் திரைப்படம் என மூன்று வெற்றி படங்களை கொடுத்துள்ளார். நடிகர் மணிகண்டனின் பேட்டிகள் எப்போதுமே அனைவரையும் மோட்டிவேட் பண்ணும் வகையில் இருக்கும். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசிய மணிகண்டன், தனது வாழக்கையில் நடந்த முக்கிய விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.
வெளிப்படையான பேச்சு
இதில் "எங்க வீடு கிரகப்பிரவேசம் பண்ணி இருந்தோம். அப்போ என் அப்பா என் பிரண்ட்ஸ் கிட்ட, நான் பெத்தேன் படிக்க வைத்தேன் அவ்வளவுதான். மீதி எல்லாம் நீங்க தான் பாத்துக்கிறீங்க, அவன பாத்துக்கோங்க என்று சொன்னார்".
"அது எந்த அளவுக்கு உண்மை என்றால், என்னுடைய கேரியர் செலக்சன்ல இருந்து, சினிமாவிற்கு நான் தகுதியானவனா என்று நான் நினைக்கும் போதெல்லாம், ரொம்ப போலியாக நீ ட்ரை பண்ணா உனக்கு வரும் என்று சொல்லாமல், இல்ல உனக்கு வரவில்லை, நீ நிறைய கத்துக்கணும் என்று சொல்லி என் பிரண்ட்ஸ் மோட்டிவேட் பண்ணாங்க".
"அதே மாதிரி நான் நடுவுல ஒரு 4, 5 வருஷம் எங்க வீட்ல சுத்தமா காசு வாங்க கூடாது என்று முடிவு பண்ணிட்டேன். எனக்கும் அப்போ வேலை கூட இல்லை. அப்போ அந்த நாலு வருஷமும் என்னுடைய பிரண்ட்ஸ் பிரவீன் மற்றும் ராகேந்து தினமும் காசு கொடுப்பாங்க" என அவர் கூறியுள்ளார்.

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
