ரக்ஷனுக்கு பதில் தொகுப்பாளராக வந்த மணிமேகலை, ஆனால் ஒரு ட்விஸ்ட்... குக் வித் கோமாளியில் இன்று
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் வழக்கமாக ரக்ஷன் தான் தொகுப்பாளராக வருவார். ஆனால் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் மணிமேகலை தான் தொகுப்பாளராக வந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
மணிமேகலை
ஆரம்பத்தில் வேறொரு டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்த நிலையில் அதன் பின் விஜய் டிவிக்கு வந்ததும் தொகுப்பாளராக தான் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக மாறி தற்போது காமெடியில் கலக்கி வருகிறார்.
இன்றைய எபிசோடு..
இன்றைய எபிசோடின் துவக்கத்தில் மணிமேகலை தான் முதல் ஆளாக செட்டுக்குள் வந்தார். அவர் தான் தொகுப்பாளர் போல அனைத்தையும் சொல்லி முடித்தார். ஷோ தொடங்கி கிட்டத்தட்ட கால் மணி நேரம் மணிமேகலை தான் தொகுப்பாளராக இருந்து குக்குகளை செட்டுக்குள் வரவேற்றார்.
ஆனால் அதற்கு பிறகு தான் ரக்ஷன் ஷோவுக்குள் வர, மணிமேகலையை கோமாளி வேஷம் போட அனுப்பி வைத்து விட்டனர். அவர் அந்நியன் கெட்டப்பில் கோமாளியாக அதன் பின் உள்ளே வந்தார்.
பீஸ்ட் நெகடிவ் விமர்சனம் பார்த்துவிட்டு நெல்சனுக்கு போன் செய்த விஜய்! இப்படியா சொன்னார்