போய் பொழைக்கிற வழிய பாருங்க- மதம் வைத்து வந்த விமர்சனத்திற்கு மணிமேகலை செம பதிலடி
மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இப்போது மக்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்து இருப்பவர் மணிமேகலை.
தொகுப்பாளராக இருந்தபோது ஒரு பாடலில் நடனம் ஆடியவர் மீது காதல் ஏற்பட்டு அவரையே பெற்றோர்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார்.
அதன்பின் விஜய் டிவி பக்கம் வந்த அவர் நிறைய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் இருந்துள்ளார்.
அதேபோல் இன்னொரு பக்கம் சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து அதன் மூலமாகவும் சம்பாதித்து வந்தார். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறி இப்போது சொந்த விஷயங்களை கவனித்து வருகிறார்.

பிரபலத்தின் பதிலடி
மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைனின் மதம் வெவ்வேறு என நமக்கு தெரியும்.
அதை வைத்து சமீபத்தில் டுவிட்டரில் ஒரு மீம் வைரலாக பரவ அதைப்பார்த்த மணிமேகலை தனது டுவிட்டரில், இப்படி லைப் புல்லா உலறிட்டு இருக்கிறதுக்கு போய் உறுப்புடியன வேலையை பார்க்கலாம்ல என பதிலடி கொடுத்துள்ளார்.
Ipdi life fulla ularitey irukaradhuku poi urupadra vazhiya paakalamla ?♂️ https://t.co/VfokoEg0Wt
— MANIMEGALAI (@iamManimegalai) March 22, 2023
தனது மனைவி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த ரவீந்தர்- புகைப்படத்துடன் இதோ