ஐஸ்வர்யா ராய் மகளுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு கொடுத்த மணிரத்னம்- பெருமையாக சொல்லும் நடிகை
நடிகை ஐஸ்வர்யா ராய்
மறைந்த நடிகர் விவேக் அவர்கள் எந்திரன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இனி எத்தனை உலக அழகிகள் வந்தாலும் தமிழக மக்களுக்கு எப்போதுமே ஐஸ்வர்யா ராய் தான் அழகி என்று கூறுவார்.
அது உண்மை தான், இப்போதும் அவர் அழகியாக தான் பார்க்கப்படுகிறார்.
நடிகை ஐஸ்வர்யா இப்போது மணிரத்னத்தின் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் 1 படத்தில் நந்தினி என்ற மிகவும் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்பட புரொமோஷன்களில் ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டு வருகிறார். அப்போது ஒரு பேட்டியில், மணிரத்னம் தனது மகள் ஆராத்யாவிற்கு வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு பரிசை அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா சொன்ன தகவல்
இந்த பிரம்மாண்டமாக படத்தில் நடிப்பதே பெரிய அதிர்ஷ்டம் என பிரபலங்கள் இருக்க ஐஸ்வர்யாவின் மகளுக்கு ஒரு சீன் எடுக்க ஆக்ஷன் என்று சொல்லும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.
இதனை கூறிய ஐஸ்வர்யா அந்த தருணத்தை என் மகள் எப்போதுமே மறக்க மாட்டாள், அது பெரிய பரிசு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அதிரடி மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்- ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூலா?

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
