ஜீ தமிழ் சீரியலில் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்! ரசிகர்கள் அதிர்ச்சி
Parthiban.A
in தொலைக்காட்சிReport this article
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த மனிஷாஜித் தற்போது திடீரென விலகி இருக்கிறார்.
கன்னத்தில் முத்தமிட்டால்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால். அதில் ஆதிரா கழுத்தில் தாலி கட்ட போவது யார் என இந்த வாரம் பரபரப்பான திருமண காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த சீரியல் 100 எபிசோடுகளை கடந்த நிலை அதை குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது ஹீரோயின் மனிஷா திருமண உடையில் தான் இருந்தார். அதன் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது.
மனிஷாஜித் விலகல்
திருமண எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது.
ஹீரோயின் ஆதிரா ரோலில் நடித்து வந்த மனிஷாஜித் தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதை அவரே சமூக வலைத்தளத்தில் உறுதி செய்திருக்கிறார். புது ஆதிராவாக நடிக்க போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
விஜய் எனக்கு சகோதரர் மாதிரி, அஜித் - ? - முன்னணி நடிகர்கள் குறித்த பாலிவுட் நடிகர் அமீர் கான்