ஓகே சொல்ல இத்தனை கண்டிஷன்களா.. அஜித் பட நடிகை இப்படியெல்லாம் செய்கிறாரா
மஞ்சு வாரியர்
மலையாள திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "அசுரன்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக சிறப்பாக நடித்து ரசிகர் கூட்டத்தை அமைத்து கொண்டார். அதன்பின் மலையாள சினிமாவில் பிசியாக இருந்த மஞ்சு வாரியர் அஜித் நடிப்பில் வெளியான "துணிவு" படத்தில், அசத்தலான மாடர்ன் பெண்ணாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த மஞ்சு வாரியரிடம் கதை சொல்ல பல இயக்குனர்கள் செல்கின்றனர். ஆனால் அவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு போடும் கண்டிஷன் சற்று சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.
அவர் சிறந்த படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல கண்டிஷன் போடுகிறார். மேலும், இதனால் பட வாய்ப்புகளையும் நழுவ விட்டுள்ளார்.
இப்படியெல்லாம் செய்கிறாரா
இவர் இயக்குனரிடம் பேசுவதற்கு முன்பு இயக்குனர் எத்தனை ஹிட் படங்கள் கொடுத்தார் என தெரிந்து கொண்டுதான் அடுத்த கட்டத்திற்கு செல்கிறாராம். அதே போல் முதலில் கதையை படித்து விட்டு பின் இயக்குனரை அழைப்பாராம். இவ்வாறு மிகவும் பொறுமையாக கதையை தேர்வு செய்து வருகிறார் மஞ்சு.
இந்நிலையில் தற்போது மஞ்சு வாரியர் தமிழில் 3வது படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தை "FIR" பட இயக்குனர் மனு அனந்த இயக்குகிறார்.
"மிஸ்டர் எக்ஸ்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வமான தகவல் "பிரின்ஸ் பிக்சர்ஸ்" நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்க உள்ளனர். இந்த படமும் நடிகை மஞ்சு வாரியர்-க்கு வெற்றி படமாக இருந்தால் தமிழில் அவரது ஹாட்ரிக் வெற்றியாக கருதப்படும்.
தளபதி விஜய்யுடன் விளையாடும் இந்த குழந்தை யார் தெரியுமா.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க