தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்!! இத்தனை வசூல் செய்துள்ளதாக?
மஞ்சும்மல் பாய்ஸ்
மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில் கடந்த 22 பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சென்று குகை ஒன்றில் சிக்கிக்கொள்வதும். அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை மீதி கதை. தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
வசூல் விவரம்
இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் உலக அளவில் இதுவரை 50 கோடி வசூல் செய்துள்ளதாம். இனி வரும் வாரங்களில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
