தமிழகத்தில் மட்டுமே பட்டய கிளப்பும் வசூல் வேட்டை நடத்தியுள்ள மஞ்சும்மல் பாய்ஸ்- எவ்வளவு தெரியுமா?
மஞ்சும்மல் பாய்ஸ்
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்ரவரி 23ம் தேதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ்.
சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இப்படம் நிஜ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம், படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற குணா குகை செட் தான் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது.

எனக்கு அந்த நடிகை மீது இப்போதும் க்ரஷ், சைட் அடிக்கவே அங்கே செல்வேன்- கார்த்தி பிடித்த பிரபலம் யார்?
படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். ரிலீஸ் ஆன நாள் முதல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் செம வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
தமிழக வசூல்
தமிழகத்தில் 500 திரைகளுக்கு மேல் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வசூலை நெருங்கியதுடன் இதுவே அதிகம் வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.
இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 50 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
