சிவகார்த்திகேயன் செயலால் வருத்தப்பட்ட மனோபாலா- அவரே போட்ட டுவிட்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் வருங்காலத்திற்கு ஒரு உதாரணமாக இருப்பவர்.
இவர் சட்டென்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெறவில்லை, அதற்கு பின் எவ்வளவு உழைப்பு உள்ளது என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும்.
கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் செம வசூல் வேட்டை நடத்தியது. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளது.‘
அடுத்த படம்
இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் மே 13ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் டான். இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் நடித்துள்ளார்கள், யார் யார் என்று போஸ்டர்களை பார்த்தே நாம் தெரிந்துகொண்டோம்.
மே 13ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று மாலை 7 மணியளவில் படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இந்த தகவலை சிவகார்த்திகேயன் படக்குழுவை டாக் செய்து டுவிட் செய்துள்ளார்.
ஆனால் அதில் படத்தில் நடித்துள்ள மனோபாலாவின் பெயரை டாக் செய்ய சிவகார்த்திகேயன் மிஸ் செய்துள்ளார். அவரின் அந்த பதிவை ஷேர் செய்து மனோபாலா எனது பெயர் எங்க பா? என கேட்டுள்ளார்.
எங்கப்பா என் பேரு...??? https://t.co/4gzsn1B7Hl
— Manobala (@manobalam) May 6, 2022
இவ்வளவு வன்முறையா, சாணிக் காயிதம் படம் எப்படி உள்ளது- ரசிகர்களின் விமர்சனம்

இந்திய கடற்படை திறனை மேம்படுத்த ரூ.5,000 கோடி முதலீடு., 175 போர் கப்பல்களாக அதிகரிக்கும் இலக்கு News Lankasri

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
