14 வருடமாக இரவு உணவு சாப்பிடாத பிரபல நடிகர்.. வியப்பில் ஆழ்த்தும் சம்பவம்!
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் மனோஜ் பாஜ்பாய். இவர் தமிழில் விஷாலின் சமர் மற்றும் சூர்யாவின் அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் சமந்தாவுடன் சேர்ந்து நடித்த பேமிலிமேன் வெப் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த தொடர் பல சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மனோஜ் பாஜ்பாய் உணவு பழக்கத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் என்னுடைய தாத்தாவின் உணவு பழக்கங்களை கடைபிடிக்க ஆரம்பித்தேன்.
நான் இரவு உணவை சாப்பிடுவதை நிறுத்தினேன். எனக்கு பசி எடுத்தால் அதிக தண்ணீர் குடிப்பேன். இதன் பின்னர் நான் பல நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள முடிந்தது என்று கூறியுள்ளார்.
சாய் பல்லவியா இது? சிறுவயதில் எவ்ளோ அழகாக இருக்கிறார் என்று பாருங்கள்!..