மனோஜ் பாரதிராஜாவின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்
மனோஜ் பாரதிராஜா
படங்களை விட பாடல்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மனோஜ் பாரதிராஜா. சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால், திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா இந்த பாடல்கள் நினைவுக்கு வந்தால் உடனடியாக நம் கண்முன் தோன்றுவது மனோஜ் பாரதிராஜா தான்.
1999ல் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். பின் ஈஸ்வரன், மாநாடு, விருமன் போன்ற படங்களில் நடித்து வந்த மனோஜ் தற்போது தனது தந்தையை போல் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
குடும்பம்
ஆம், சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் மார்கழி திங்கள் எனும் படத்தை இயக்கி வருகிறார். மனோஜ் பாரதிராஜாவின் திரையுலக பக்கம் மட்டுமே நாம் அறிவோம். ஆனால், அவருடைய சொந்த வாழ்க்கை குறித்து பலருக்கும் தெரியானது.
இவர் கடந்த 2006ஆம் ஆண்டு நந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் மனோஜ் பாரதிராஜா எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
