வசூலில் மிரட்டும் மார்கோ திரைப்படம்.. இதுவரை இத்தனை கோடியா
மார்கோ
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். இவர் கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்திருந்த கருடன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பல யர்த்தார்த்தமான திரைப்படங்களை மலையாள திரையுலகில் பார்த்து இருக்கிறோம். ஆனால், முழுமையான கமர்ஷியல் அம்சத்தில், ரத்தம் தெறிக்க தெறிக்க உருவான ஒரு திரைப்படம் தான் மார்கோ.
ஹனீப் அடேனி என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
வசூல்
இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 92 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கவுள்ளது.